Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமநாதபுரம் விநாயகர் சதுர்த்தி விழாவில் தீ விபத்து: சதி வேலை காரணமா?

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே சந்தைக்கடை பகுதியில் வல்லபவிநாயகர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல இந்த ஆண்டும் 11 நாள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று 10-வது நாள் திருவிழா நடைபெற்றது. 

கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கோவில் பூசாரி கோவில் நடையை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில் வளாகத்தில் பந்தல் போட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. 1.30 மணி அளவில் விநாயகர் கோவில் முன்பு போடப்பட்டிருந்த பந்தலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாகி சேகர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். தீ அணைந்த பிறகு கோவில் அருகே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் கற்கள் வீசப்பட்டு கிடந்தன. எனவே யாரோ விஷமிகள் இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கோவில் நிர்வாகி சேகர் போலீசில் புகார் செய்துள்ளார். 

ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளிதரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் அங்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post