Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பரவுகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

சார்ஸ் பரவியபோது முகமூடி அணிந்து நடக்கும் நபர்!
கடந்த 2003-ம் ஆண்டில் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் சார்ஸ் (SAARS) என்ற வைரஸ் கிருமிகளால் சுவாச நோய் பரவியது. அதில் 800 பேர் உயிரிழந்தனர். தற்போது இதுபோன்று புதிய உயிர்க்கொல்லி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவை சேர்ந்த கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவர் புதுவிதமான சுவாச நோய் பாதித்து சிகிச்சைக்காக லண்டன் வந்தார்.

அவரிடம் நடத்திய பரிசோதனையில் அவரை புதிய வகை உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. சமீபத்தில் இவர் சவுதி அரேபியா சென்று இருந்தார். அங்கு இவரை இந்த நோய் தாக்கியுள்ளது. அங்கு இது போன்ற நோய்க்கு ஏற்கனவே ஒருவர் பலியாகி இருக்கிறார். தொடக்கத்தில் ஜலதோஷம் போன்று ஏற்படும் இந்நோய் படிப்படியாக நுரையீரலில் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நோய் பாதித்தவர் லண்டனில் சிகிச்சை பெறுவதால் இங்கிலாந்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிகரி ஹார்டில் கூறும்போது. தற்போது இந்த நோய் 2 பேருக்கு மட்டும் பாதித்து இருப்பது. தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என தெரியவில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
[vuukle-powerbar-top]

Recent Post