Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விமான ஊழியருடன் கிலானி மகன் வாக்குவாதம்: விமானத்தில் பரபரப்பு!

லாகூரிலிருந்து கராச்சி சென்று கொண்டிருந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகனுக்கும், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற எம்பியான அலி மூஸாவின் பாதுகாவலருக்கு சாதாரண வகுப்பில் டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை தன்னுடன் பிசினஸ் கிளாஸ் எனப்படும் உயர்தர வகுப்பு இருக்கையில் அமருமாறு அலி மூஸா கூறினார். ஆனால் இதற்கு விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவருக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த பிரச்னையில் தலையிட்ட விமானத்தின் கேப்டன், சொன்னதைக் கேட்கவில்லையென்றால் மீண்டும் விமானத்தை லாகூருக்கே திருப்பி விடுவேன் என அலி மூஸாவை எச்சரித்தார். இதையடுத்து தனது கோரிக்கையை கைவிட்டு அலி மூஸா அமைதியடைந்தார் என்று ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post