Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் சிம்புவின் "போடா போடி" படப்பாடல்கள்.


சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள "போடா போடி" படத்தின்  விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட "லவ் பண்ணலாமா வேணாமா" என்ற பாடல் மிக பெரியளவில் மக்களிடையே பேசப்படுவதோடு மட்டுமன்றி, அனைத்து உள்ளூர் வானொலி அலைவரிசைகளிலும் இப்பாடல் நேயர்கள் விருப்பத்தின் பேரில்  மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த பாடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை அடுத்து "போடா போடி" படத்தின் அனைத்து பாடல்களையும் மிக விரைவில் விரைந்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.வரும் அக்டோபர் 10 ஆம் தேதி மேற்படி பாடல்கள் வெளியிடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

"போடா போடி"படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர்  தரண். இப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் .

ஷோபனா மற்றும் "விண்ணைத்தாண்டி வருவாயா"  புகழ் கணேஷ் ஆகியோர் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.சந்தானம் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ள இப்படமானது வரும் தீபாவளிக்கு மக்களுக்கு விருந்தாகவுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post