Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரியலூர் அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி விபத்து - 10 மாணவர்கள் காயம்


அரியலூர் அருகே பள்ளி வாகனம் ஒன்று மரத்தில் மோதியதில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பேபி மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்த பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் பள்ளி வாகனம் முதுகுளத்தூர் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி மரத்தில் மோதியது.இதில் வாகனத்தில் இருந்த 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.மேலும் காயமடைந்துள்ள மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாளுக்கு நாள் பள்ளி வாகனங்களின் விபத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இன்று காலையில் தான் திருப்பத்தூரில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ள பாரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதற்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பாதாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் போக்குரத்து விதிகளை மதித்து நடந்து கொண்டாலே பாதி விபத்துகள் குறையும்.
[vuukle-powerbar-top]

Recent Post