Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

10 ஆம் தேதி வெளிவரும் "போடா போடி" படப்பாடல்கள்.


"போடா போடி" படத்தின் பாடல்கள் வெளியாகுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்,இப்படத்தின் இசையமைப்பாளர் தரன் தன்னுடைய 29 ஆவது வயதை இன்று பூர்த்தி செய்துள்ளார்.இன்று பிறந்த நாளை கொண்டாடும் தரன் மேலும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்றும் அவருடைய வாழ்க்கை மிக பிரகாசமானதாக அமைய வேண்டும் எனவும்  அலை செய்திகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தரன் இசையமைப்பில் வெளியான "பாரிஜாதம்"படத்தின் பாடல்கள் இன்றுவரை அனைவர் வாயிலும் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.இதனால் "போடா போடி" படத்தின் பாடல்களுக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

தற்போது அனைத்து பாடல்களும் இசையமைக்கப்பட்டு ஒரு சில வேலைகள் மட்டும் மீதமுள்ள நிலையில், அவையும் விரைந்து முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இரசிகர்கள் காதுகளில் ரீங்காரம் போடவுள்ளது "போடா போடி" படப்பாடல்கள்.

அன்றைய தினம் நடைபெறவுள்ள விஷேட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் அனைத்து முக்கிய உறுப்பினர்களும்  கலந்து கொள்ளவுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post