Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரானில் போதைப் பொருள் கடத்திய 10 பேருக்கு மரண தண்டனை


ஈரானில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 


மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்த நிலையிலேயே இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ஒரு தொன் அபின் மற்றும் ஒரு தொன் மெதாம் பெடாமின் என்பவற்றைக் கடத்தியதாக அவர்கள் 10 பேர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான மரண தண்டனை தெஹ்ரானிலுள்ள சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஈரானில் வருடந்தோறும் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளில் முக்கால் பங்கானவை போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவையாகும். 

இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஈரானில் 344 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஈரானில் குறைந்தது 360 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஈரானிய பிரஜைகளில் 2 மில்லியன் பேர் போதை பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 400,000 பேர் ஹெரோயின் போதை பொருள் பயன்பாட்டாளர்களாவர்.
[vuukle-powerbar-top]

Recent Post