Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவில் பணத்திற்காக கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

அமெரிக்காவில் பணத்திற்காக கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

ஃபிலடெல்பியாவின் கிங் ஆஃப் பிரசியா நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அதிகாலை 4.30 மணியளவில் குழந்தை சான்வியின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும் குழந்தையை கடத்தி 50ஆயிரம் டாலர் பணம் பணயத்தொகை கேட்டதாக குடும்ப நண்பரான ரகுனானேன் யனேடமுரிஐ கைது செய்த போலீசார், பணம் கேட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை, கடத்தல், கொள்ளை என பல பிரிவுகளில் Philadelphia காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிங் ஆஃப் பிரசியாவில் கடந்த திங்கட்கிழமை பாட்டி சத்யவதியை கொலை செய்துவிட்டு 10 மாத பெண் குழந்தை சான்வி கடத்தப்பட்டாள். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்த காவல்துறையினர், குழந்தை பற்றிய தகவல் அளிப்பவர்க்கு 50 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் குழந்தை, சடலமாக மீட்கப்பட்டிருப்பது சான்வியின் பெற்றோரை சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது. குழந்தையின் தந்தை வெங்கட கொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post