Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஸ்ரீ ராகவேந்திரா கோயிலுக்காக ரஜினிகாந்த் வழங்கிய 10 கோடி.


ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் தீவிர பக்தனாய் இருப்பவர் நடிகர் ரஜினிகாந் அவர்கள்.அவருடைய  100 ஆவது படம் கூட ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளை பற்றியதாகவே அமைந்திருந்தது.அந்தளவிற்கு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் தீவிரமான பக்தராக இருக்கிறார்

அண்மையில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் கோயிலான மந்த்ராலயத்திற்கு 10 கோடி ரூபாய்கள் நன்கொடையாக அளித்துள்ளார் ரஜினி அவர்கள்.அடிக்கடி இக்கோயிலுக்கு சென்று வரும் அவர், தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இக்கோயிலுக்கு தவறாமல் சமூகமளிப்பதுண்டு.

ரஜினி அவர்களின் நன்கொடை தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் மந்த்ராலய நிர்வாகம்,மேற்படி பணத்தை கொண்டு மந்த்ராலயத்திற்கு பின் பக்கமாக இருக்கும் சர்வக்ன்ய மந்திர் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கே புதிதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய 25 குடில்கள் அமைக்கப்படவுள்ளதாகவும்,அத்தோடு 100 சாதாரண அறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பணத்தை கொண்டு கோயிலை சுற்றிலும் அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post