Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மிரட்டும் புயல் - தமிழ்நாட்டில்11 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள நீலம் புயல் நாளை சென்னை அருகே கடக்க இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலம் புயல் காரணமாக நாளை சென்னை, நாகை, ,அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர்,திருவாரூர்,திருவள்ளூர்,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதுச்சேரியிலும் காரைக்கால் போன்ற இடங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post