Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

12 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் விஜய் மற்றும் இமான்.


"சூப்பர் குட் மூவீஸ்" பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் செய்தி  அலை செய்திகள் வாசகர்கள் அறிந்ததே.இப்புதிய படத்தை இயக்குனர் ஜெயம் ராஜாவிற்கு "வேலாயுதம்" படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நேசன் என்பவரே இயக்கவுள்ளார்.

இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி,இப்புதிய படத்திற்காக இசையமைக்கும் பணியை ஏற்றுள்ளாராம் இமான்.ஏற்கனவே இமான் இசையில் "தமிழன்"என்ற படத்தில் விஜய் நடித்திருந்தார்.2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம்  இசை ரீதியாக வெற்றிபெற்றிருந்தது.

இப்போது 12 வருடங்கள் கழித்து மீண்டும் இணையவுள்ளனர்  விஜய் மற்றும் இமான்.அண்மையில் இமான் இசையில் வெளியான "மைனா" மற்றும் "கும்கி" படத்தின் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தன.இதனால் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் இப்புதிய படத்திற்காக இசையமைக்கவுள்ளார் இமான்.


[vuukle-powerbar-top]

Recent Post