Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 13, 14 அன்று சென்னையில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சி



அக்டோபர் 13, 14 அன்று சென்னையில்  தமிழகப் பண்பாட்டு கண்காட்சி

 தமிழகப் பெண்கள் செயற்களம் தொடந்து ஆறாவது ஆண்டாக நடத்தும்  தமிழகப் பண்பாட்டு கண்காட்சியை பற்றிய செய்திக் குறிப்பு: தமிழ் உணர்வாளர்கள் அவசியம் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளவும் . நாளை காரிக் (சனி) கிழமை மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழர் வரலாறு பற்றிய நூலும் வெளியிட உள்ளனர் . குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய கண்காட்சி. உங்கள் குடும்பத்துடன் இந்த கண்காட்சிக்கு சென்று பார்வையிடும் படி கேட்டுக் கொள்கிறோம். தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்றை நாம் அவசியம் அறிதல் வேண்டும் .

வருகின்ற அக்டோபர் 13, 14 ஆகிய நாட்களில் மயிலை கச்சேரி சாலையில் உள்ளஇராசா திருமண மண்டபத்தில் ஆறாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் உலகம் தோன்றியதிலிருந்து... ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப் படங்கள் அமைக்க உள்ளோம். மேலும் அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு உலகத் தோற்றம்... உயிர்கள் தோற்றம்... பழைய கற்கால தமிழன்... புதிய கற்கால தமிழன்... பெருங் கற்கால தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் நூல் வெளியிட உள்ளோம். 

காரி : மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை 
ஞாயிறு : காலை ஒன்பது மணி முதல் மாலை 8 மணி வரை 
தொடர்புக்கு 
இசைமொழி 
ஒருங்கிணைப்பாளர் 
தமிழகப் பெண்கள் செயற்களம் 9094430334,
9094430334, 9884187979

[vuukle-powerbar-top]

Recent Post