Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட 130 குழந்தைத் தொழிலாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட 130 குழந்தைத் தொழிலாளர்களில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 33 குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில நூற்பாலைகளில், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அவற்றில் ஐந்து முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 

நூற்பாலைகளில் பணியாற்றிய 130 குழந்தைகளை மீட்ட அதிகாரிகள், அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். 

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி, ராயக்கோட்டை, நாலரப்பள்ளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 33 குழந்தைகள், ஈரோட்டில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். 

அவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி, அவர்களது பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட்ட ஆட்சியர், அவரவர் இருப்பிடத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post