Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார் மாவட்ட ஆட்சியர்


இஸ்லாமியர் குடும்பத்தில் பதிமூன்றே வயது நிரம்பிய பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி அருகே இஸ்லாமிய சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, அரசு காப்பகத்தில் சிறுமி சேர்க்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த ரகிம்பாயின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். ரகிம்பாய் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். 

இந்நிலையில், இந்த சிறுமிக்கும், கங்கலேரியைச் சேர்ந்த அஜீர் என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி, உடனடியாக சமூக நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரை அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்த உத்தரவிட்டார். அதிகாரிகளும் திருமணத்தை தடுத்து நிறுத்தி, மணப்பெண்ணை மீட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில், சிறுமியின் உறவினர்கள் ஒன்று திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண் பருவம் அடைந்த பிறகு வயது வரம்பின்றி எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடத்தலாம் என்று கூறினர். ஆனால், இதை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சிறுமிக்கு தற்போது திருமணம் நடத்தப் போவதில்லை என்றும் 18 வயது ஆன பின் நடத்துவதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். சிறுமியை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், இரண்டு நாட்களுக்கு பின் மனு கொடுக்குமாறு கூறி, அவர்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post