Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் மீண்டும் 144 தடை உத்தரவு ~ அதிர்ச்சியில் மக்கள்

கூடங்குளம் அணுஉலையை சுற்றியுள்ள ஊர்களில் மேலும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமுல் படுத்த உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் வலுவடைந்த நிலையில் கூடங்குளம் சுற்றியுள்ள இடிந்தகரை கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்தது.

இந்த தடை உத்தரவு இன்றுடன் முடிவடைகிற நிலையில், மீண்டும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் அறிவித்து இருக்கிறார். 

 இதனால் இடிந்தகரை கிராமத்துக்குள் வேறு ஊரை சேர்ந்த பொது மக்களோ, அல்லது கட்சித் தலைவர்களோ செல்லக் கூடாது என்றும், போராட்டக் காரர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் 29ம் திகதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்கிற தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post