Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

14 வயது பள்ளி மாணவியின் கட்டாய திருமணம் கலெக்டர் தடுத்து நிறுத்தம்

14 வயது பள்ளி மாணவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த கட்டாய, பால்ய திருமணத்தை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்தினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (23) என்ற உறவினரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதனால் மாணவியை பள்ளிக்கு அனுப்புவதை அவளுடைய பெற்றோர் நிறுத்தினார்கள். மாணவியின் திருமணம் கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளியில் உள்ள ஒரு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்களுக்கு கொடுத்து வந்தனர். பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் நடப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட கலெக்டர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஜெகநாதனுக்கு அவர் உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின் பேரில் தாசில்தார் ஜெகநாதன் இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு எலத்தூர் வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது, வீட்டில் இருந்த மாணவியின் பெற்றோர் மற்றும் செந்தில்குமாரிடம் பெண்ணின் திருமண வயது 18 ஆகும். எனவே, 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது குற்றம் என்று அறிவுரை கூறினார்கள்.

இதனால் மாணவியின் பெற்றோரும், செந்தில்குமாரும் 18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர். திருமணமும் நிறுத்தப்பட்டது. மேலும், அந்த மாணவியை மீண்டும் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் சேர்த்து விட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post