Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி: திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் பதற்றம்!

டெங்கு கொசுக்களின் கூடாரம்!
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டார். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. எழும்பூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 150க்கு மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் டெங்குவுக்கு சிறுமி பவுசியா பலியானார். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பவுல். கூலி தொழிலாளி. இவரது மூன்றாவது மகள் அனிதா (19). 

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அனிதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில் அனிதாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அனிதா பரிதாபமாக இறந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அனிதாவின் சடலத்தை கிராமத்திற்கு கொண்டு வந்தனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு இளம்பெண் இறந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post