Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 19 இல் வெளியாகும் இன்னுமோர் "சிவப்பு ரோஜாக்கள்".


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய "பீட்சா"படமானது வரும் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.இப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர்,"பீட்சா" ,காதலுடன் கூடிய திகில் கதையம்சம் கொண்ட படமாக இருப்பதாகவும், ஏனைய திகில் படங்கள் போல் அல்லாமல் மிக வித்தியாசமாக இது அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழில் ஏற்கனவே வெளியான காதலுடன் கூடிய திகில் படங்களான "மூடு பனி" மற்றும் " சிவப்பு ரோஜாக்கள்" போன்றவை மக்களால் மிக அதிகளவில் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்களாக, இன்றளவும் மக்களால் பேசப்படுகின்றன.

தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் வணிகரீதியான படங்களுக்கு மத்தியில்,"பீட்சா" போன்ற ஒரு படம் இரசிகர்களுக்கு மாறுபட்டதாக அமையவுள்ளது.தமிழில் வெளியான திகில் படங்கள் வரிசையில் நிச்சயம் "பீட்சா" படமும் ஒரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்.

[vuukle-powerbar-top]

Recent Post