Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரனைட் மோசடியில் பிஆர்பி மீது மேலும் 2 வழக்குகள்

னைட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரனைட் நிறுவனம் மீது மதுரை கீழவளவு காவல்துறையினர் மேலும் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதரன் என்பவர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். 

அவர் கொடுத்துள்ள புகாரில், மதுரை மாவட்டம் புலிச்சேவல்பட்டி பகுதியில் சிறுமாணிக்கம் கண்மாயில் கிரனைட் கற்களை வெட்டி எடுத்ததுடன், அது தொடர்பான ஆதரங்களை மறைக்க சம்பந்தப்பட்ட இடத்தில் மணலைக் கொட்டியும், கற்களை நிறைத்தும் பி.ஆர்.பி. நிறுவனம் மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் மட்டும் தமிழக அரசுக்கு சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றொரு புகாரில், குப்பையன்குளம் என்ற இடத்தில், பி.ஆர்.பி. நிறுவனம், முறைகேடாக வெட்டி எடுத்த கிரனைட் கற்களால் 14 லட்சம் ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில், பி.ஆர்.பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது, சட்ட விரோதமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்ததாக கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட கிரனைட் முறைகேட்டில் சிக்கிய பி.ஆர்.பி., சிந்து, ஒலிம்பஸ், சி.ஜி. கிரனைட்ஸ், மதுரா கிரனைட்ஸ், ஓம் ஸ்ரீஓம் கிரனைட் உட்பட பல்வேறு நிறுவனம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post