Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவேரி அதிவிரைவு தொடருந்து இன்று அதிகாலை தடம் புரண்டது ~ 20 பேருக்கு காயம்

மைசூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த காவேரி அதிவிரைவு பயணிகள் தொடருந்து இன்று அதிகாலை தடம் புரண்டது. 

பங்காருப்பேட்டையை தாண்டி வேலூர் மாவட்டம் மல்லானூர் அருகே மலைப்பகுதியில் தொடருந்து வந்தபோது தண்டவாளத்தில் பாறாங்கற்கள் கிடப்பதை கண்ட தொடருந்தின் ஓட்டுநர், உடனடியாக தொடருந்தை நிறுத்த தடுப்பு போட்டுள்ளார். 

இதனால் தொடருந்து இயந்திரம் உட்பட 4 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனமழையால் சரிந்துகிடந்த பாறாங்கற்களை கண்டு தக்க நேரத்தில் தொடருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

அதிகாலை 4 மணியளவில் தொடருந்து தடம்புரண்டதைத் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றுவருகிறது. இதில் நூற்றுக்கும் அதிகமான தொடருந்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடருந்து தடம்புரண்ட பாதை, இருவழிப்பாதை என்பதால் போக்குவரத்தில் பாதிப்பில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post