Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2012 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் அடுத்த வாரம்

2012 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு வரும் எட்டாம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஒன்பதாம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர் விபரம் அக்டோபர் பத்தாம் தேதி அறிவிக்கப்படுகிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 11 ந் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 ந் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அக்டோபர் 15 ந் தேதி பொருளாதாரத்திற்கான பரிசு பெறுபவர் விபரம் வெளியிடப்படுகிறது. ஆனால், இந்த பரிசுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளோர் விபரம் தெளிவாகத் தெரியவில்லை.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை, சீன எழுத்தாளர் மோ யான் அல்லது ஜப்பானின் ஹருகி முரகாமி பெறக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளியல், அமைதி ஆகியவற்றில் உலகளவில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. முதல் நோபல் பரிசு கடந்த 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post