Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாகையையும் விட்டுவைக்காத டெங்கு ~ 222 பேர் மருத்துவ மனையில் அனுமதி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் டெங்கு அறிகுறியுடன் 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாகை தலைமை அரசு மருத்துவமனையில் 222 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேயாளிகளுக்கு 10 தனி அறைகளில் தீவிர சிகிச்சை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்காக 11 சிறப்பு மருத்துவர்கள் உற்பட 25 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post