Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையைச் சேர்ந்த பிஆர்பி கிரனைட் நிறுவனத்திற்கு 24,000 ஏக்கர் நிலம், ரூ.6,000 கோடி சொத்து ?

மதுரையைச் சேர்ந்த பிஆர்பி கிரனைட் நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளரான பி.ஆர். பழனிச்சாமியின் உறவினர்கள் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் இந்த நிலங்கள் இருப்பதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பி.ஆர்.பி. நிறுவனம் குறித்த விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த நிலங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதனிடையே, கிரனைட் குவாரி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள துரை தயாநிதி குறித்து விசாரிக்க, மத்திய அமைச்சர் அழகிரியின் மருமகன் விவேக்கிற்கு மதுரை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விவேக் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர் இந்தியா வந்தால் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினர் கருதுகின்றனர். அழகிரியின் மற்றொரு மருமகன் வெங்கடேஷிடம் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post