Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்கள்

கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்த இந்திய மீனவர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 26 பேர் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள். 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு மீனவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கடலில் காற்றின் வேகம் அதிகமானதால் திசைமாறி ஈரான் கடல் எல்லைக்குள் வந்துவிட்டதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த வாரம் பஹ்ரைனில் மீன்பிடித்துவந்த குமரி மாவட்ட மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கத்தார் அரசு கைது செய்தது. 

அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post