Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு கனிமொழி வழக்கு இன்று விசாரணை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், சிபிஐ பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு டெல்லி உயர்நீதிமன்றத்தி இன்று விசாரணைக்கு வருகிறதுகலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத்குமார், சுரேந்திர பிபாரா, ஹரி நாயர், கௌதம் தோஷி மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெற உள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த செப்டம்பர் 5-ந் தேதி நீதிபதி ஏ.கே. பதக் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, கனிமொழிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரு மனு மீது விவாதிக்க கூடுதல் அவகாசம் கோயிரியிருந்தார். அதை ஏற்று ஒத்திவைக்கப்பட்ட கனிமொழியின் மனு மீது இன்று விசாரணை நடைபெறகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post