Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திராவில் தீப்பற்றிய தொடருந்து ~ 2 பேர் பலி

ஐதராபாத்-சோலாப்பூர் பயணிகள் ரெயிலில் பயங்கர தீ: 2 பேர் பலி 7 பயணிகள் படுகாயம் பெங்களூர், 

அக்.17- ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் ரெயிலில் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உடல் கருகி செத்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். பாசஞ்சர் ரெயிலில் தீ ஐதராபாத்-சோலாப்பூர் பயணிகள் ரெயில் கர்நாடக மாநிலம் குல்பர்கா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரெயில் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு குல்பர்கா டவுன் ரெயில் நிலையத்துக்கு நேற்று பகல் 12 மணி அளவில் வந்து சேர்ந்தது. சோலாப்பூர் செல்வதற்காக அந்த ரெயில் தயார் நிலையில் இருந்தது. அப்போது திடீரென்று அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. 

தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பெட்டியில் இருந்து குபு குபுவென்று புகை வெளியே வந்து கொண்டிருந்தது. பயணிகள் அதிர்ச்சி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறல் சத்தத்துடன் உயிர் தப்பிக்க கதவு இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவந்தனர். 

ஒருவருடன் ஒருவர் முண்டியடித்து ரெயிலை விட்டு கீழே இறங்க முயற்சி செய்தனர். இதனால் அந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீ அணைப்பு படை மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க லாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 

தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க 2 மணி நேரத்துக்கும் மேலானது. தீயை முழுவதுமாக அணைத்த பிறகு உள்ளே சென்று பார்த்தபோது அந்த தீப்பிடித்த ரெயில் பெட்டியில் 2 பயணிகளின் உடல் தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்தது. 

7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை இதற்கிடையே அந்த பெட்டியில் தீப்பற்றிய தகவல் அறிந்ததும், ரெயிலின் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் அவசரம் அவசரமாக ரெயிலில் இருந்து கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். 

காயம் அடைந்த பயணிகள் குல்பர்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. 

போலீசார் விசாரணை இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் குல்பர்கா மாவட்ட பொறுப்பு மந்திரி ரேவுநாயக் பவுமுகி சம்பவம் நடைபெற்ற ரெயில் நிலையத்துக்கு வந்து பார்வையிட்டார். 

அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும்படி ரெயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post