Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குமரி மாவட்ட மீனவர்களுக்கு பஹ்ரைன் நாட்டில் 2 வார சிறை தண்டனை

பஹ்ரைன் நாட்டில் பணியாற்றி வரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக கத்தார் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

இதில், 10 பேருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 65 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 வார சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பாதிக்கப்பட மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மீனவர்களால் அபராதத் தொகையைக் கட்டமுடியாது என்பதால், மீனவர்கள் சார்பில் பஹ்ரைன் நாட்டு படகு உரிமையாளர்களே அந்த அபராத தொகையைக் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டுள்ளது. 

இதனிடையே, மீதமுள்ள 12 தமிழக மீனவர்களும், வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

குமரி மாவட்டம் தூத்தூர், குளச்சல், மனக்குடி, சைமன் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள், கடந்த 6ம் தேதி, பஹ்ரைன் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். காற்றின் போக்கு அதிகமாக இருந்ததால், வழி தவறி கத்தார் கடல் எல்லைக்குள் அவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post