Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக மேலும் 2 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக மேலும் 2 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கிரீன் இன்ஃப்ரா, கமல் ஸ்டீல் (GREEN INFRA, KAMAL STEEL) ஆகிய நிறுவனங்கள் மீதான இந்த வழக்குகளில், அதிக வருவாய் மதிப்பு என போலியாக காட்டி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதையடுத்து பீகார், ஒடிஷா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மொத்தம் 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிரீன் இன்ஃப்ரா, கமல் ஸ்டீல் நிறுவனங்களின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரிகள் அறிக்கை அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post