Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் அமுலுக்கு வரும் 2 மணிநேர மின்வெட்டு

சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் 10 இருந்து 15 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடே காரணம் ஆகும்.

தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் 11 500 மெகா வாட் ஆகும், ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 8000 இருந்து 9000 மெகா வாட் வரையே  கிடைக்கின்றது.

இந்நிலையில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் காற்றலை உற்பத்தி அறவே இல்லாமல் போய்விட்டது. காற்றலைகள் அனைத்தும் சுத்தமாக சுற்றாமல் நின்றுவிட்டன. 

இந்த மின் தட்டுப்பாட்டடை சமாளிப்பதற்காக இன்று முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மின்வாரியத்தின் தலைவர் ஞானதேசி உற்பட அனைவரும் கலந்துகொண்டார்கள்.

பின்னர் அனைவரும் கலந்தாலோசித்து சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நாளைமுதல் இரண்டுமணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துகிறது மின்சாரவாரியம்.
[vuukle-powerbar-top]

Recent Post