Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரோடு மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக 2 பெண்கள் கைது

ஈரோடு மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்துறை பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விஜயமங்கலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் மாலதி என்ற பெண், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நோட்டுகளை கொடுத்து வந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெருந்துறைச் சேர்ந்த ஈஸ்வரன், சண்முகம் உள்ளிட்டோரிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கும்பலிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், இரண்டு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து,மாலதி , கோகிலா, ஈஸ்வரன், சண்முகம் , ஜெகதீஷ் , நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மயில்சாமி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post