Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளத்திற்கு எதிரான வழக்கின் இரண்டாம் நாள் அமர்வு

கூடங்குளம் அணு உலையில், எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அரசு தரப்பில் வாதாடிய  வழக்கறிஞர் வாஹன்வதி,  மனுதாரர் சார்பில் சமூகமளித்திருந்த பிரசாந்த் பூஷன் தெரிவித்த சில தகவல்கள் முரண்பட்டவை என்றும், கூடங்குளம் அணு உலை, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அணு உலையின் செயல்பாடு உடனடியாக நின்றுவிடும் என்றும், கதிரியக்க ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தார். அரசு தரப்பு விளக்கம் முடிவடையாத காரணத்தால், வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post