Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடுதல் கட்டணம் வசூலித்த 3 தனியார் பள்ளிகளுக்கு 76 கோடி ரூபாய் அபராதம்

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூடுதல் கட்டணம் வசூலித்த 3 தனியார் பள்ளிகளுக்கு 76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களிடம் நன்கொடை மற்றும் இதர கட்டணங்கள் வசூலித்ததற்காக ராய்ப்பூரில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு இந்த அபராதத்தை சட்டீஸ்கர் மாநில கல்வித் துறை விதித்துள்ளது. 

இதில், ஹோலிகிராஸ் பென்சியன்பதா பள்ளிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா பப்ளிக் பள்ளிக்கு 49 கோடியே 45 லட்சம் ரூபாயும், ஜெயின் பப்ளிக் பள்ளிக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், இந்த பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post