Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் அடுத்தடுத்து 3 கொலைகளால் மக்கள் மத்தியில் பீதி

சென்னையில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் துணிகர கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு குறித்த மிகப்பெரிய கேள்வியை இது எழுப்பி இருக்கிறது. ரவுடிகளால் வெட்டிக் கொலை :

சென்னை மெரினா கடற்கரையில் சவாரிக்கான குதிரைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தவர் அப்பு. புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரான இவர், நேற்றிரவு வீடு திரும்பிய சிறிது நேரத்திற்குள்ளாகவே ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

பணத்திற்காக நடந்த கொலைகள் : 

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கண் மருத்துவரான ராதிகாவின் வீட்டில், நெல்லையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராதிகாவும், மருத்துவராக உள்ள அவரது மகனும் வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 62 வயதான லட்சுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். இரவு வீடு திரும்பிய மருத்துவர்கள், லட்சுமி இறந்துகிடப்பதைப் பார்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில் லட்சுமி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

தாயை கொலை செய்த மகன் : 

பெற்றமகனே, தாயை கொலை செய்த சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ந்துள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், சென்னையில் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த தனது தாய் பாக்கியலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். 

தகராறு முற்றிய நிலையில், பாக்கியலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்த கோபிநாத், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்திருப்பது சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் பொதுமக்களிடம் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post