Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு

இலங்கையில்  கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில், அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது.

அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார்.

மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

அதேவேளை, கொழும்பில் சராசரி வெப்பநிலையான, 31 பாகை செல்சியசே நிலவுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post