Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலை திறக்க வலியுறுத்தி நெல்லையில் 31-ந் தேதி உண்ணாவிரதம் சரத்குமார் அறிவிப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் திருநெல்வேலியில் உண்ணாவிரத போராட்டம் வருகிற 31-10-2012 அன்று நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, `ஏன் வேண்டும் கூடங்குளம்' என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். 

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து விளக்க புத்தகம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. 

அடுத்து, எனது தலைமையில் கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கக்கோரி, கோவையில் இருந்து கூடங்குளம் வரை, `விழிப்புணர்வு வாகன பிரசாரம்' மேற்கொள்ளப்படும். 

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு, நன்மைகள் என எல்லாவற்றையும் உதயகுமாரோடு நேருக்கு நேர் விவாதிக்க தயார். நெல்லையில் 31-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நாட்டுநலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post