Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா செல்லமுயன்ற 35 சிங்களவர்கள் கைது!


சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 35 சிங்களவர்கள் கந்தர கடற்பிரதேசத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தென் கடற்பரப்பில் படகில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இசுறு புதா' என்ற படகு மூலம் பயணிக்க முற்பட்ட இவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களை காலி துறைமுகத்துக்கு அழைத்துசென்ற கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post