Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹாங்காங்கில் 36 சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு (படங்கள்)



ஹாங்காங் தேசிய தின விழாவை காண சென்ற 36 சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 

ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இரு படகுகள் மோதி கொண்ட விபத்தில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 

விக்டோரியா துறைமுகத்தில் ஹாங்காங் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கைகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் படகு ஒன்றும் மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. 

இந்த விபத்தில் கடலில் மூழ்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மீட்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post