Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாகிஸ்தான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 39 பேர் கைது

பாகிஸ்தான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 39 பேரை அந்நாட்டு கடற்படை நேற்று கைது செய்தது. 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கராச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்கள் அனைவர்மீதும் வழக்கு பதிவு செய்த Docks காவல்நிலைய போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்போவதாகத் தெரிவித்தனர். 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 100 பேரை நல்லெண்ண அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் விடுவித்தது.

இந்தியா – பாகிஸ்தான் கடல் எல்லையை பிரிக்கும் பகுதியில் எவ்வித அடையாளங்களும் இல்லாததால் மீனவர்கள் எல்லை தாண்டுவதும், கைதாவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.

கடல் எல்லை குறித்த சர்ச்சை இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தையை மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிறுத்தியது.
[vuukle-powerbar-top]

Recent Post