Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடரும் பள்ளி வாகன விபத்து ~ திருவண்ணமலையில் 3 வயது சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, பள்ளி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி, மூன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்தாள். 

இஞ்சிமேடு கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கங்காதரன், ஜெயப்பிரதா தம்பதியரின் மூன்றரை வயதுக் குழந்தை மோனிஷா பெரணமல்லூரில் உள்ள சித்தார்த்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

பள்ளி சென்றுவிட்டு நேற்று மாலை வேனில் வீட்டுக்குத் திரும்பிய மோனிஷா, வீட்டருகே இறக்கி விடப்பட்டாள். அப்போது, உடனடியாக வேன் புறப்பட்டதால், பின்புறச் சக்கரங்களில் சிக்கிய மோனிஷா, சம்பவ இடத்திலேயே பலியானாள். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி வேனை அடித்து நொறுக்கினர். இந்நிலையில், அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இந்த சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post