Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகாணத்தில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகாணத்தில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாயினர். 

மேலும் 4 பேர் இதில் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகாணத்தின் மையப்பகுதியான மில்வூக்கியில், வணிக வளாகம் ஒன்று உள்ளது. மக்கள் ‌கூட்டம் நிறைந்த இவ்வணிக வளாகத்தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் இருவர் பலியாயினர்.

துப்பாக்கியால் சுட்ட நபர் தனக்குதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் இச் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல என தெரிவித்துள்ளார். 

இதே மில்வாக்கி நகரிலேயே சீக்கியர்களின் குருத்வாரா ஒன்றிலும் திரையரங்கிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post