Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் டெங்கு ~ 400 பேர் பாதிப்பு

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் குழந்தைகள். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் தாக்கி ஒருவர் மட்டும்தான் இறந்திருப்பதாகவும் டெங்கு காய்ச்சல் தீவிரமான பிரச்சனை இல்லை என்றும் ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் ரவீந்திர ரெட்டி கூறியிருப்பதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே வீட்டிற்குள்ளும் சுற்றுப்புறத்திலும் தண்ணீரை தேக்கிவைக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post