Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை இலாகா அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருந்தது. வங்கக்கடலிலும், அடுத்து அரபிக்கடலிலும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவடைய தொடங்கி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வங்கக்கடலில் அந்தமானுக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவாகி இருந்தது. இதனால் வங்கக்கடலில் உள்ள ஈரப்பதத்தை தமிழகத்தையொட்டி உள்ள மேகங்கள் ஈர்த்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. அந்தமானுக்கு அருகில் இருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை சற்று நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. 

அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் 29-ந்தேதிக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோரப்பகுதிகள், தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்கள், மலைமாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை அதிகாரிகள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு வருமாறு:-

மானாமதுரை, ஈரோடு, தொண்டி தலா 3 செ.மீ., வேதாரண்யம், ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம், கொடைக்கானல், திருச்சுழி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post