Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை இராணுவத்திடம் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகள்

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆட்டிலறிகளை மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது. 

130 மி.மீ, மற்றும் 152 மி.மீ ரகத்தைச் சேர்ந்த ஆட்டிலறிகளே மீட்கப்பட்டுள்ளன. 

இவற்றுடன், சக்திவாய்ந்த இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகு ஒன்றையும் இலங்கைப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். 

முள்ளிவாய்க்காலில் தரைதட்டியுள்ள ஜோர்தானிய கப்பலுக்கு அருகில் இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post