Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 60 ஈழத்தமிழர்கள் கைது!

படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதற்காக தமிழகம் தூத்துக்குடி பகுதியில் தங்கி இருந்த ஈழத்தமிழ் அகதிகள் 60பேர் கைது!
திருச்சி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் ‌தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி ஈழத்தமிழ் அகதிகளிடம் விசாரணை நடத்தினார்.

தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19 சிறுவர்கள் 7 சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர்.
இதில் அகதிகள் குழுவை‌ சேர்ந்த ஐந்து பேர் காவல்துறை விசாரணையில் தப்பிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

[vuukle-powerbar-top]

Recent Post