Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டத்தில் கைதான 63 பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 63 பேருக்கு சென்னை உயர் நிதீமன்ற மதுரை கிளை பிணை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது 3 பெண்கள் உட்பட 66 பேரை திருநெல்வேலி காவல்துறை கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்டவை தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பில் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மதிவாணன் 63 பேருக்கு ஜாமின் வழங்கினார். இதில் 3 பெண்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதால் அவர்களின் ஜாமின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post