Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பூவுலகின் நணபர்கள் என்ற இயக்கத்தால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பினர்.

அணு உலை கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவீர்கள்,கடல் நீரை நன்னீராக்கும் கருவி சான்று பெற்றதா?,சுழற்சி முறையில் நீர் நிரப்பும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அளித்த தடையில்லா சான்று பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. 

அப்பொழுது பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் எனக் கூறினார்.இதனால் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post