Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று தனது 70 ஆவது வயதில் கால் பாதிக்கும் அமிதாப் பச்சன்.


இந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் "பிக் பி" என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 70 ஆவது பிறந்த தினமாகும்.

அவருடைய பிறந்த தினத்தையொட்டி, அவருடைய மனைவியான ஜெயா  பச்சனால் மிக பெரிய விழா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள "பிலிம் சிட்டியில்" ஏற்பாடு செய்யபட்டுள்ள மேற்படி விழாவிற்கு ஒட்டு மொத்த இந்திய சினிமா ஜாம்பவான்கள் அழைக்கப்படுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்,சிரஞ்சீவி,ஷாருக் கான், நாகர்ஜூனா மற்றும் ராம் சரண் தேஜா உள்ளிட்ட  பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டு தங்கள் தோழருக்கு வாழ்த்துக்களை பரிமாறவுள்ளனர்.

இன்று மாலை தொடங்கவுள்ள நிகழ்ச்சியில், மாபெரும் இசை கச்சேரி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இசை கலைஞர்கள் வாத்தியங்கள் வாசிக்க செங்கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து விழா நடைபெறும் பந்தலுக்கு அழைத்து வரப்படவுள்ளார் அமிதாப் பச்சன்.

அவருடைய படத்தில் அவருடன் சேர்ந்த நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள், பிரபல அரசியல்வாதிகள் என பெரும் திரளானவர்கள் ஓன்று கூடும் மாபெரும் நட்சத்திர விழாவாக அமையவுள்ளது அமிதாப் பச்சனின் பிறந்த நாள் விழா.


[vuukle-powerbar-top]

Recent Post