Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

8-ம் தேதி முற்றுகை போராட்டம்: கூடங்குளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு


8-ம் தேதி முற்றுகை போராட்டம்: கூடங்குளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை மறுநாள் திட்டமிட்டபடி நடக்கும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு உதவிட மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 200 போலீசார் வரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க கடலோர காவற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடிந்தகரையில் இருந்து வைராவிகிணறு செல்லும் சாலையை சேதப்படுத்தியது தொடர்பாக போராட்டக்குழுவைச் சேர்ந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post