Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் கூண்டு - வரலாறு காணாத கடல் சீற்றம்

சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இடது பக்கமாக புயல் கரையை கடக்கும் எனவும் கடுமையான வானிலையால் துறைமுகம் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நீலம் புயலால் சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களிலும் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது.இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புயலின் வீரியத்தை சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படலாம் எனவும் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதகாவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post