Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'நீலம்' புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு

சென்னையின் தெற்கே 'நீலம்' புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக்கடலில் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நீலம் புயல் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே நாளை கரையை கடக்க இருக்கும் புயலால் ஒரு மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குடிசை வீடுகள் புயல் காற்றால் அடித்து செல்லப்படும் அபாயமும் மரங்கள் அடியோடு பெயர்ந்து விழும் அபாயமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு மற்றும் மின் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து புயலால் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்துறை ஆணையர் ஜதிந்திரநாத் ஸ்வெயின் கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்கள் தயாராக இருப்பதாகவும் ஒரு மாதகாலத்திற்கு தேவையான அரிசி, மணெண்ணை தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மக்கள் வசதிக்காக படகுகளை தயார் படுத்த உத்தரவும் விடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் நிவாரணப் படையும், மாநில பேரிடர் நிவாரணப் படையும் மீட்புக்கு ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.




[vuukle-powerbar-top]

Recent Post